அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 29
August 31 , 2022 1129 days 427 0
2010 ஆம் ஆண்டு மே மாதத்தில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் "அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் என்ற நிலையை அடைய" உறுதி பூண்டுள்ளன.
1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று செமிபாலடின்ஸ்க் அணுசக்தி சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் வகையில் கஜகஸ்தான் நாட்டினால் இந்தத் தீர்மானம் தொடங்கப்பட்டது.
அணு ஆயுதங்களை ஒட்டு மொத்தமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதன் முறையாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்பட்டது.
அனைத்து வகையான அணுசக்தி சோதனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேசச் செயற்கருவி 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான அணு-சோதனைத் தடை ஒப்பந்தம் (CTBT) ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.