TNPSC Thervupettagam

அணுசக்தியில் தனியார் துறைகள்

February 18 , 2026 19 hrs 0 min 21 0
  • இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்திப் பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (சாந்தி) சட்டம், 2025 நிறைவேற்றப்பட்ட பிறகு அதானி குழுமம் அணு சக்தித் துறையில் நுழைந்தது.
  • அதானி பவர் லிமிடெட், அதானி அணுசக்தி லிமிடெட் என்ற பெயரில் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
  • சாந்தி சட்டம் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையங்களை இயக்கவும் வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைக்கவும் அனுமதிக்கிறது.
  • அணுசக்திச் சட்டத்திற்குப் பதிலாக வந்த இந்தச் சட்டம் அணுசக்தி உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கிறது.
  • இந்தியாவில் தற்போது சுமார் 8.8 ஜிகாவாட் (GW) நிறுவப்பட்ட அணுசக்தி திறன் உள்ளது என்பதோடு இது மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 3% பங்களிக்கிறது.
  • ஆற்றல் மாற்ற இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்தப் பத்தாண்டுகளில் அணுசக்தித் திறனை 32 ஜிகாவாட்டாக உயர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்