அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நிதி
February 26 , 2019 2427 days 766 0
அடுத்த 10 வருடங்களில் 18 மாநிலங்களில் இருக்கும் 733 மிகப்பெரிய அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த இந்தியாவிற்கு உலக வங்கி 11000 கோடிகள் அளிக்க அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிதி செயல்பாட்டு நடவடிக்கை, பராமரிப்பு மற்றும் அவசர செயல் திட்டங்கள் ஆகியவற்றோடு தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் உபயோகப்படுத்தப்படும்.
இத்திட்டம் அணைகளில் சுற்றுலாத் துறை, மீன்வளம், நீர்நிலை பொழுதுபோக்கு, சூரிய மற்றும் நீர்மின்சக்தி போன்ற நடவடிக்கைகள் மூலமாக வருவாய் உருவாக்குதல் மீதும் கவனம் செலுத்தும்.