அண்டார்டிக் உயிரினங்கள் மீதான பருவநிலை மாற்ற விளைவு
April 12 , 2026 68 days 175 0
பருவநிலை மாற்றம் காரணமாக முக்கிய அண்டார்டிக் உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளதாக IUCN தனது செந்நிறப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.
கடல் பனி உருகுவதால் 2080 ஆம் ஆண்டுகளில் எம்பரர் பென்குயின்களின் (ஆப்டெனோடைட்ஸ் ஃபோர்ஸ்டெரி) எண்ணிக்கை பாதியாக குறையும் என எதிர்பார்க்கப் படுவதால், அவை தற்போது அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உணவு (க்ரில்/இறால் போன்ற கணுக்காலிகள்) கிடைப்பது குறைந்துள்ளதால், 2000 ஆம் ஆண்டிலிருந்து அண்டார்டிக் ஃபர் சீல்களின் (ஆர்க்டோசெஃபாலஸ் கசெல்லா) எண்ணிக்கை 50%க்கும் மேல் குறைந்துள்ளது, எனவே, அவையும் அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளன.
அதிக வீரியம் கொண்ட ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (HPAI) போன்ற நோய் பரவலால், மேற்கத்திய எலிஃபண்ட் சீல் (மிரூங்கா லியோனினா) தற்போது எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம் என்ற நிலையில் உள்ளது.
கடல் பனி உருகுதல், பெருங்கடல் வெப்ப நிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கம், உணவு மற்றும் உயிர்வாழ்வை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் குறைக்கவும், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் அவசர உலகளாவிய நடவடிக்கை தேவை என்பதை இந்தச் செந்நிறப் பட்டியல் உணர்த்துகிறது.