TNPSC Thervupettagam

அண்டார்டிக் பனிப்பரப்பு வரலாறு காணாத அளவில் சரிவு

October 15 , 2026 7 days 109 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அண்டார்டிக் கடல் பனிப்பரப்பு அதன் குளிர்கால அதிகபட்ச அளவில் செயற்கைக்கோள் பதிவுகளில் மூன்றாவது மிகக் குறைந்த அளவை எட்டியதுடன் இது சுமார் 17.59 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.
  • பனியின் பரப்பளவு நீண்டகாலச் சராசரியை விட சுமார் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் குறைவாக இருந்தது.
  • பதிவுகளில் உள்ள குளிர்கால கடல் பனியின் மிகக் குறைந்த நான்கு அதிகபட்ச அளவுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
  • அண்டார்டிக் கடல் பனி வழக்கமாக செப்டம்பரில் அதன் அதிகபட்ச அளவையும் பிப்ரவரியில் அதன் குறைந்தபட்ச அளவையும் அடையும்.
  • செயற்கைக்கோள் பதிவுகள் 1978 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கின; கடல் பனிப் பரப்பை அளவிட அறிவியலாளர்கள் செயலற்ற நுண்ணலை உணரிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • அண்டார்டிக் கடல் பனியானது 1979 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தசாப்தத்திற்கு சுமார் 1% அதிகரித்தது, ஆனால் 2016 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க சரிவுகள் தொடங்கின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்