அண்டார்டிக் ஸ்ட்ராபெரி ஃபெதர் ஸ்டார் என்ற உயிரினம்
August 25 , 2023 810 days 414 0
அண்டார்டிக் பெருங்கடலில் சுமார் 20 கால்கள் கொண்ட ஒரு வகையான உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பெருங்கடலின் அடிப்பகுதியில் அறிவியலாளர்கள் கண்டறிந்த நான்கு புதிய வகை கிரினாய்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
அதன் உடலில் உள்ள ஸ்ட்ராபெரி போன்ற ஒரு நுனியமைப்பினால் இது இப்பெயரைப் பெற்றது.
இது போன்ற கிரினாய்டுகள் நமது புவியின் ஆரம்பகாலக் கடல் பகுதிகளில் அதிகம் காணப் பட்டன.
ஆனால், தோராயமாக 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெர்மியன் என்ற பேரழிவின் போது புவியில் அழிந்து போன 95% உயிரனங்களுடன் சேர்த்து அவை பெருமளவில் அழிந்து போயின.