TNPSC Thervupettagam

அண்ணன் சீர் திருமண நிதியுதவித் திட்டம்

November 19 , 2026 13 hrs 0 min 66 0
  • திருமணத்தின் போது தகுதியுள்ள மணப்பெண்களுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநில அரசு ₹812 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், மேலும் அவரது பெயர் குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட நிலம் அல்லது மின்சார நுகர்வு வரம்புகளை மீறுபவர்கள், வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
  • திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பு முதல் திருமணத் தேதி வரை தமிழ்நாடு இ-சேவை தளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்