அதிக இணையப் பயனர்கள் கொண்ட 10 முன்னணி நாடுகள்- 2025
August 27 , 2025 14 days 52 0
சீனா 1.11 பில்லியன் இணையப் பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இது அதன் மக்கள்தொகையில் சுமார் 78 சதவீதத்தை குறிக்கிறது.
இந்தியா சுமார் 806 மில்லியன் பயனர்களுடன் இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதோடு இது அதன் மக்கள்தொகையில் 55.1 சதவீதப் பங்கினைக் குறிக்கிறது.
அமெரிக்காவில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள இணையப் பயன்பாட்டின் பரவல் விகிதத்துடன், 322 மில்லியன் இணையதளப் பயனர்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் பத்து இடங்களில் கீழ் நிலையில், மெக்சிகோ 110 மில்லியன் இணையப் பயனர்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதோடு இது அதன் மக்கள் தொகையில் 83 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நைஜீரியா 107 மில்லியன் பயனர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது என்பதோடு இது அதன் மக்கள்தொகையில் பாதிக்கும் மிகவும் குறைவானதாகும் என்றாலும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இணைய சந்தைகளில் ஒன்றாகும்.
பாகிஸ்தான் 116 மில்லியன் மற்றும் 1.11 பில்லியன் இணையதளப் பயனர்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானில் 255 மில்லியன் அளவிலான பெரிய மக்கள்தொகை இருந்தபோதிலும், இணையப் பயன்பாட்டின் பரவல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.