உலகளாவிய இராணுவச் செலவினமானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 2718 பில்லியன் டாலராக உயர்ந்தது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இதில் 9.4 சதவீதம் என்ற கணிசமான உயர்வுப் பதிவாகியுள்ளது.
இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5 சதவீதமாக உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டில், உலகளாவிய இராணுவச் செலவினத்தில் சுமார் 37 சதவீதத்தைக் கொண்டு, உலகிலேயே அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
உலகளாவிய இராணுவச் செலவினத்தில் சீனா 12 சதவீதத்தைக் கொண்டிருந்தது.
இரண்டும் ஒரு சேர உலகளாவிய இராணுவச் செலவினத்தில் பாதிக்கும் மேலான பங்கினை கொண்டிருந்தன.
உலகளாவிய இராணுவச் செலவினத்தில் 5.5% பங்குடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய இராணுவச் செலவினம் கொண்ட நாடாக இருந்தது.
இது சுமார் 86.1 பில்லியன் டாலர்களைச் செலவிடுவதோடு, 2023 ஆம் ஆண்டு முதல் அதன் இராணுவச் செலவினம் ஆண்டிற்கு 1.6 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாகக் கருதப்படும் இந்தியா, உலகளாவிய ராணுவச் செலவினத்தில் சுமார் 3.2 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளதுடன் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று முன்னணி நாடுகளை விட பின்தங்கி உள்ளது.