TNPSC Thervupettagam

அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடுகள் 2024-25

May 2 , 2025 87 days 121 0
  • உலகளாவிய இராணுவச் செலவினமானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 2718 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இதில் 9.4 சதவீதம் என்ற கணிசமான உயர்வுப் பதிவாகியுள்ளது.
  • இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5 சதவீதமாக உயர்ந்தது.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளாவிய இராணுவச் செலவினத்தில் சுமார் 37 சதவீதத்தைக் கொண்டு, உலகிலேயே அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
  • உலகளாவிய இராணுவச் செலவினத்தில் சீனா 12 சதவீதத்தைக் கொண்டிருந்தது.
  • இரண்டும் ஒரு சேர உலகளாவிய இராணுவச் செலவினத்தில் பாதிக்கும் மேலான பங்கினை கொண்டிருந்தன.
  • உலகளாவிய இராணுவச் செலவினத்தில் 5.5% பங்குடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய இராணுவச் செலவினம் கொண்ட நாடாக இருந்தது.
  • இது சுமார் 86.1 பில்லியன் டாலர்களைச் செலவிடுவதோடு, 2023 ஆம் ஆண்டு முதல் அதன் இராணுவச் செலவினம் ஆண்டிற்கு 1.6 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாகக் கருதப்படும் இந்தியா, உலகளாவிய ராணுவச் செலவினத்தில் சுமார் 3.2 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளதுடன் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று முன்னணி நாடுகளை விட பின்தங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்