TNPSC Thervupettagam

அதிக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் - ஏப்ரல் 2024

May 5 , 2024 14 days 119 0
  • ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 12.4 சதவீதம் உயர்ந்து 2.10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
  • இந்த அதிகரிப்பு முதன்மையாக 13.4 சதவீதம் என்ற வருடாந்திர அதிக உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகளால் (8.3% வரை) ஏற்பட்டது.
  • சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மறைமுக வரிச் சீர்திருத்தம் தொடங்கப் பட்டதிலிருந்து இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பதிவு இதுவாகும்.
  • ஒட்டு மொத்த வசூல் ஆனது 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
  • முந்தைய அதிகபட்ச வசூலானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில், இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஆண்டு இறுதி விற்பனையைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்