TNPSC Thervupettagam

அதிக மகசூல் தரும் 3 புதிய பயிர் வகைகள்

June 3 , 2025 10 days 55 0
  • மகாராஷ்டிராவின் டாக்டர் பஞ்சப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடம் (PDKV) ஆனது மூன்று புதியப் பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய வகைகளில் கோதுமை வகை AKAW 5100, மஞ்சள் சோளம் கலப்பின காரிஃப் வகை CSV 65 yellow மற்றும் கொண்டைக்கடலை சூப்பர் ஜாக்கி (AKG 1402) ஆகியவை அடங்கும்.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் சரியான காலக்கட்டத்தில் விதைப்பதற்காக AKAW 5100 வகை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது / அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக, சோயா அவரை வகைகள் PDKV அம்பா (AMS 100-39) மற்றும் PDKV பூர்வா (AMS 2014-1), மற்றும் நிலக்கடலை வகை TAG 73 (TAG 14-73) ஆகியவை பயிரிடும் பரப்பு விரிவாக்கத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • குஜராத்திற்கு TAG 73 நிலக்கடலை, சத்தீஸ்கருக்கு PDKV அம்பா சோயா அவரை மற்றும் அசாம், மேகாலயா மற்றும் தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்திற்கு PDKV பூர்வா சோயா அவரை ஆகியவை பயிரிட அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்