லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், வெளியிட்ட "Spotlight on the Top 25 Methane Plumes in 2025: Landfills" என்ற அறிக்கை, உலக அளவில் அதிக மீத்தேன் வெளியிடும் கழிவுத் தளங்களை அடையாளம் கண்டுள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில், அதிக மீத்தேன் உமிழ்வுகளைக் (மணிக்கு 3.6-7.6 டன்கள்) கொண்ட 18 நாடுகளில் உள்ள 25 குப்பைக்கிடங்குத் தளங்களை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது.
தெலுங்கானாவில் உள்ள இந்தியாவின் ஜவகர் நகர் குப்பைக்கிடங்கு (மணிக்கு 5.9 டன்கள்) உலக அளவில் 4-வது இடத்தையும், மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கு (மணிக்கு 4.9 டன்கள்) 12-வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாசா எமிட் மற்றும் கார்பன் மேப்பர் போன்ற செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 700-க்கும் மேற்பட்ட கழிவுத் தளங்களில் இருந்து சுமார் 3,000 மீத்தேன் வெளியேற்றங்களை இந்தத் தரவு பகுப்பாய்வு செய்தது.
குப்பைக்கிடங்குகள் உலகளாவிய மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 20% பங்களிப்பதுடன் இது பருவநிலை நடவடிக்கைகளுக்கான முக்கிய இலக்காக அவற்றை மாற்றுகிறது.
கார்பன் டை ஆக்சைடை (CO₂) விட 86 மடங்கு அதிக வெப்பத்தை ஈர்த்துத் தக்க வைக்கும் தன்மை கொண்ட மீத்தேன் வாயு சமீபத்திய புவி வெப்பமடைதலில் 45% க்கும் அதிக காரணமாக உள்ளது.