TNPSC Thervupettagam

அதிக வெப்பத் தாக்க அபாயமுள்ள மாநிலங்கள்

June 4 , 2025 9 days 46 0
  • 2024 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான ஒரு வெப்பமான ஆண்டாக இருந்ததால், தமிழ்நாடு தீவிர வெப்பத் தாக்க நிகழ்வுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளது.
  • 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவானது அதன் மிக நீண்ட வெப்ப அலை பாதிப்பு காலத்தை எதிர்கொண்டது.
  • அதிகம் முதல் மிகவும் அதிக வெப்பத் தாக்க அபாயம் உள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டமும் மிகக் குறைந்த அல்லது குறைந்த வெப்பத் தாக்க அபாயம் உள்ள வகைகளின் கீழ் இடம் பெறவில்லை.
  • சுமார் 11% மாவட்டங்கள் மிதமான வெப்ப அபாயத்தை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் 43% மாவட்டங்கள் அதிக ஆபத்தில் உள்ளன, மேலும் 46% மாவட்டங்கள் மிக அதிக வெப்பத் தாக்க அபாயத்தில் உள்ள வகையைச் சேர்ந்தவையாகும்.
  • நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் மீதான குழுவால் (The Council on Energy, Environment and Water - CEEW)) வெளியிடப் படும் இந்த அறிக்கையில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதல் இடத்தைக் கொண்டுள்ளது.
  • கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்ந்து இதில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்