அதிக வெப்பம் மற்றும் உணவு அமைப்புகள் குறித்த FAO-WMO அறிக்கை (2026)
July 14 , 2026 89 days 216 0
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) இணைந்து வெளியிட்ட அறிக்கையானது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அதிக வெப்பம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அடையாளம் கண்டுள்ளது.
30°Cக்கும் அதிகமான வெப்பநிலையில் முக்கியப் பயிர்கள் மகசூல் இழப்பைச் சந்திக்கின்றன; ஒவ்வொரு 1°C வெப்பமயமாதலும் மக்காச்சோளத்தை 7.5%, சோயா பீனை 6.8% மற்றும் கோதுமையை 6% குறைக்கலாம்.
அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக, 1961 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய விவசாய மொத்த காரணி உற்பத்தித்திறன் (TFP) 21% குறைந்துள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்ற நிலையில் இங்கு வெப்ப அலைகள் அரிசி உற்பத்தி மற்றும் விவசாயத் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன; வெப்ப அழுத்தம் காரணமாக 2024 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 648 வேலை நேரங்களை (54 நாட்கள்) இழந்துள்ளனர்.
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடல் வெப்ப அலைகள் காரணமாக கால்நடைகள், மீன்வளம், காடுகள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.