அதிகப்படியான மருந்து உட்கொள்ளல் குறித்த விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 31
August 31 , 2021 1448 days 479 0
இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் மெல்போர்னின் செயின்ட் கில்டா (St Kilda) என்னுமிடத்தில் அமைந்த தி சால்வேசன் ஆர்மியைச் சேர்ந்த சால்லி ஜெ ஃபின் என்பவரால் தொடங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது பென்னிங்டோன் இன்ஸ்டிடியூட் எனும் ஆஸ்திரேலிய லாபநோக்கமற்ற பொதுச் சுகாதார அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டு வருகிறது.
உலகின் மிக மோசமான பொதுச் சுகாதார நெருக்கடிகளுள் ஒன்றான அதிகப் படியான மருந்து உட்கொள்ளல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆதார அடிப்படையில் அதிக மருந்து உட்கொள்ளலைத் தடுத்தல் மற்றும் மருந்து கொள்கை பற்றி விவாதிக்கவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.