TNPSC Thervupettagam

அதிகரிக்கும் வெப்பம் மற்றும் வேலைத் திறன்

August 26 , 2025 2 days 19 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) ஆகியவை Climate Change and Workplace Heat Stress (பருவநிலை மாற்றம் மற்றும் பணியிட வெப்ப அழுத்தம்) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன.
  • 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ள ஒவ்வொரு டிகிரி வெப்பநிலைக்கும் வேலை உற்பத்தித் திறன் 2 முதல் 3 சதவீதம் வரை குறைகிறது என்று அறிக்கை கூறுகிறது.
  • உலக மக்கள்தொகையில் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ பாதி பேர் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்தியாவில் அதிகாலை வெப்பநிலை உயர்வு ஆனது உட்புற மற்றும் வெளிப்புற வேலைகளில் வேலைத் திறனை கணிசமாகக் குறைக்கிறது.
  • வெப்ப அழுத்தம் ஆனது நீரிழப்பு, அதிக வெப்பத்தினால் ஏற்படும் பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற பல்வேறு சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
  • ஈரக்குமிழ் வெப்பநிலையில் (WBGT) பதிவாகும் ஒவ்வொரு மணி நேர அதிகரிப்பானது வெப்பம் அதிகம் வெளிப்படும் சூழலிலான தொழில்களில் அதிக உற்பத்தித்திறன் இழப்பை ஏற்படுத்துகிறது.
  • தினசரி வானிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானம் மற்றும் அதிக சுகாதாரச் செலவுகள் போன்ற இரட்டைச் சுமையை உருவாக்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்