விமானப் போக்குவரத்துத் துறையானது மக்களை நெருங்கிய தொடர்பு எல்லைக்குள் கொண்டு வருவதோடு, அதிக விமான நிலையங்கள் மற்றும் சிறந்த சேவை இணைப்பு வசதிடன் தேசிய முன்னேற்றத்தினையும் மேம்படுத்துகிறது.
பிப்ரவரி 19 அன்று, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4.45 லட்சமாகும்.
கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு பதிவான மிக அதிகளவிலான பயணம் இது ஆகும்.
கோவிட் பெருந்தொற்றிற்கு முன்னதாக பதிவான தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது.
தற்போது, இந்தியாவில் 147 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.