அதிகளவு பணவரவினைப் பெறும் நாடு
November 23 , 2021
1297 days
505
- 'உலக வங்கியின் பண வரவு மதிப்புகளின் உலகளாவிய தரவுத் தளம்' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையானது உலக வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டில் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றதன் மூலம் , உலகில் அதிகளவு பண வரவு பெறும் நாடாக இந்தியா மாறியது.
- இந்த நிதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் அமெரிக்கா இதன் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது.
- இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

Post Views:
505