TNPSC Thervupettagam

அதிமுக தகுதி நீக்க வழக்கு

October 11 , 2026 11 days 123 0
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிடுவதாகத் தமிழகச் சபாநாயகர் எடுத்த முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • 2026 ஆம் ஆண்டு மே 13 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு இதுவாகும்.
  • அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்களின் நடத்தையை மன்னித்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் 2026 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று நடவடிக்கைகளை கைவிட்டார்.
  • இந்த வழக்கில் சபாநாயகரின் முடிவை மூன்றாம் தரப்பினர் சவால் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்த வழக்கு இந்தியாவின் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்ட அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்