TNPSC Thervupettagam

அதிவேக சாலை வலையமைப்பின் விரிவாக்கம்

September 11 , 2025 12 days 54 0
  • இந்தியா 2033 ஆம் ஆண்டிற்குள் அதன் அதிவேக சாலை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக 11 லட்சம் கோடி ரூபாய் (125 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீடு செய்ய உள்ளது.
  • இந்தத் திட்டத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை வேகத்தில் இயங்குவதை அனுமதிக்கும் வகையிலான 17,000 கிலோமீட்டர் தூர அணுகல் கட்டுப்பாட்டுச் சாலைகளை கட்டமைப்பதும் அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 146,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கிய இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் 4,500 கிலோ மீட்டர்கள் தூர சாலைகள் மட்டுமே அதிவேக இயக்கத்திற்கான தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன.
  • முன்மொழியப்பட்ட அதிவேக வழித்தடங்களில் சுமார் 40 சதவீதம் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளன என்ற நிலையில் மேலும் 2030 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மீதமுள்ள திட்டங்கள் 2028 ஆம் ஆண்டிற்குள் தொடங்கி 2033 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • 15 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆனது தனியார் சுங்க வசூலை அனுமதிக்கின்ற கட்டமைத்துச் செயல்படுத்தும் (BOT) மாதிரியைப் பின்பற்றும்.
  • மற்ற திட்டங்கள் அரசு தனியார் பங்களிப்பு மாதிரியை (HAM) பயன்படுத்தும் என்ற நிலையில் இதில் கட்டுமானச் செலவுகளில் 40 சதவீதத்தை அரசாங்கம் முன்கூட்டியே செலுத்துகிறது.
  • 2024–25 ஆம் ஆண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது 2.5 டிரில்லியன் டாலர் செலவிட்டது என்ற நிலையில் இது முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகமாகும்.
  • 2025–26 ஆம் ஆண்டிற்கு, சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக மத்திய அரசு 2.9 டிரில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்