TNPSC Thervupettagam

அதிவேக ரயில் பாதைகள்

February 5 , 2026 12 days 55 0
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், சென்னையில் இருந்து இரண்டு வழித்தடங்கள் உட்பட ஏழு புதிய அதிவேக ரயில் (HSR) வழித்தடங்களை அறிவித்தார்.
  • சென்னையானது எதிர்காலத்தில் இரண்டு புதிய அதிவேக ரயில் பாதைகளைப் பெற உள்ளது.
  • இந்த ஏழு HSR வழித்தடங்கள்: மும்பை முதல் புனே, புனே முதல் ஹைதராபாத், சென்னை முதல் பெங்களூரு, சென்னை முதல் ஹைதராபாத், ஹைதராபாத் முதல் பெங்களூரு, டெல்லி முதல் வாரணாசி மற்றும் வாரணாசி முதல் சிலிகுரி வரை.
  • 2026-27 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழு அதிவேக ரயில் பாதைகளில் மூன்று ஹைதராபாத்தை இணைக்கின்றன.
  • இந்தத் திட்டத்தைத் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) செயல்படுத்தும்.
  • புதிய அதிவேக ரயில் பாதையிலுள்ள ரயில்கள் குறைந்தபட்சம் மணிக்கு 230 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
  • புல்லட் ரயில்கள் மணிக்கு 370 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
  • HSR வழித் தடத்திற்கு, புல்லட் ரயில்களைப் போன்ற சர்வதேச தரங்களைப் போன்ற புதிய பாதைகள் கட்டப்படும்.
  • பயணிகள் அதிக அளவில் விமானப் பயணம் மேற்கொள்ளும் நகரங்களுக்கு இடையே HSR வழித்தடங்கள் இயக்கப்படும்.
  • இந்த வழித்தடங்கள் 4000 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கும் என்பதோடு இவை ₹16 லட்சம் கோடி செலவில் உருவாக்கப்படும்.
  • தற்போது, வந்தே பாரத் உட்பட ரயில்களில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு பயண நேரம் சுமார் ஆறு மணி நேரமாகவும், ஹைதராபாத்திற்கு 12 மணி நேரத்திற்கும் அதிகமாகவும் உள்ளது.
  • இந்த வழித்தடங்கள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இடையிலான பயண நேரத்தை 1.5 மணி நேரமாகவும், பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் 2 மணி நேரமாகவும், ஹைதராபாத் முதல் சென்னை வரை 2 மணி நேரம் 55 நிமிடங்களாகவும் குறைக்கும்.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள தன்குனியிலிருந்து குஜராத்தில் உள்ள சூரத்தை இணைக்கும் புதிய பிரத்தியேக சரக்கு வழித் தடத்தையும் நிதியமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்