TNPSC Thervupettagam

அதிவேகத்தில் மின்னேற்றம் செய்யப்படும் மின் கலம்

July 18 , 2025 16 hrs 0 min 34 0
  • பெங்களூருவில் உள்ள JNCASR நிறுவனத்தினைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்கள் அதிவேகத்தில் மின்னேற்றம் செய்யப்படும் சோடியம்-அயனி மின் கலத்தினை (SIB) உருவாக்கியுள்ளனர்.
  • இது வெறும் 6 நிமிடங்களில் 80% மின்னேற்றத்தினை அடையும் மற்றும் இது 3,000 பயன்பாட்டுச் சுழற்சிகளுக்கு மேல் நீடிக்கும்.
  • வழக்கமான ஒரு SIB கலமானது, மிக மந்தமான மின்னேற்றம் மற்றும் குறுகிய ஆயுட் காலத்தினால் பாதிக்கப்படுகின்றன.
  • இந்தப் புதிய மின் கலமானது, வேதியியல் மற்றும் நுண் தொழில்நுட்பத்தின் பெரும் புத்திசாலித்தனமான கலவையைப் பயன்படுத்துகிறது.
  • லித்தியம் அயனி மின் கலமானது இதுவரையில் இந்தச் செயல்பாட்டினைக் கொண்டு இருந்தாலும், அவை விலை உயர்ந்தவையாக உள்ளன.
  • மேலும், லித்தியம் வளங்கள் மிகவும் குறைவாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் வரையறுக்கப் பட்டுள்ளன.
  • சோடியம் ஆனது, பற்றாக்குறையாகவும் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்ற லித்தியம் போலல்லாமல், மலிவானது மற்றும் இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கிறது.
  • லித்தியத்திற்குப் பதிலாக சோடியத்தில் கட்டமைக்கப்பட்ட மின் கலமானது, இந்தியா ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்