அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள்
March 16 , 2020 1989 days 575 0
2 மற்றும் 3 பிளை அறுவைச் சிகிச்சை முகமூடிகள், என் 95 முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை அத்தியாவசியப் பொருட்களாக 2020 ஜூன் 30 வரை அறிவிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 என்ற சட்டத்தினை அரசாங்கம் திருத்தி அமைத்துள்ளது.
இத்திருத்தம், கொரோனா வைரஸின் தீடீர்ப் பெருக்கத்தினால், இந்தத் தயாரிப்புகள் சரியான விலையில் சந்தையில் கிடைப்பதை உறுதி செய்வதையும், அதை கையாளுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதையும் நோக்கமாக கொண்டு உள்ளது.
மொத்தப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அவற்றை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கும் 1955 ஆம் ஆண்டில் மத்திய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியது.