TNPSC Thervupettagam

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) மசோதா - 2020

September 28 , 2020 1781 days 670 0
  • அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 என்ற மசோதாவை செப்டம்பர் 15 அன்று நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு ஜூன்  மாதத்தில் அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை மாற்றுகின்றது
  • இது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 என்ற சட்டத்தில் திருத்தம் செய்கிறது.
  • அத்தியாவசியப் பொருட்கள் சட்டமானது (1955) பல்வேறு வகையான பொருட்களின் வர்த்தகத்தில் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த மத்திய அரசை அனுமதித்தன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் பட்டது.

மசோதாவின் அம்சங்கள்

  • தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்குகிறது.
  • தனியார் முதலீட்டாளர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான ஒழுங்குமுறை தலையீடுகளின் மீதான அச்சங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போர், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு மற்றும் இயற்கைப் பேரழிவு போன்ற சூழ்நிலைகளில் விவசாய உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பதை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்