அத்தியாவசியமல்லாத 19 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு
September 28 , 2018 2640 days 898 0
மத்திய நிதி அமைச்சகமானது உயர்மட்ட நுகர்வோர் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த “19 அத்தியாவசியமல்லாத பொருள்கள்” மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.
இந்த 19 அத்தியாவசியமல்லாத பொருட்களில் காற்று குளிர்விப்பான்கள், குளிர்பதன பெட்டிகள், சலவை இயந்திரம் மற்றும் விமான விசையாழி எரிபொருள் ஆகியவை உள்ளடங்கும்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (CAD – Current Account Deficit) சுருக்குவதன் மூலம் ரூபாய் மதிப்பின் சரிவை நிலைப்படுத்தவும், வெளிநாட்டுக்கு வெளியேறும் நிதிகளை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வரவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு மற்றும் வெளியேறும் அந்நிய செலவாணி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு CAD ஆகும். இது ஏப்ரல்-ஜுன் காலண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4% ஆக அதிகரித்துள்ளது.