TNPSC Thervupettagam

அந்தமான் மற்றும் நிக்கோபாரின் 3 தீவுகள் பெயர் மாற்றம்

December 31 , 2018 2338 days 889 0
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு கௌரவமளிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் மூன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பெயர் மாற்றம் செய்திருக்கின்றார்.
  • பெயர் மாற்றப்பட்ட தீவுகளாவன
    • ராஸ் தீவு (பழைய பெயர்) - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு
    • நீல் தீவு (பழைய பெயர்) - சாஹீத் தீவு
    • ஹேவ்லாக் தீவு (பழைய பெயர்) - ஸ்வராஜ் தீவு
  • 1943 ஆம் ஆண்டு ஆசாத் இந்த் அரசை ஏற்படுத்தியதாக அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் தீர்மானத்தின் மீதான 75வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையில் 150 மீட்டர் உயரமுடைய கொடிக் கம்பத்தில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார்.
  • மேலும் பிரதமர் இந்த சிறப்பு நாளின் நினைவாக சிறப்பு அஞ்சல் தபால் தலையையும், 75 ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டார்.
பின்னணி
  • சுபாஷ் சந்திர போஸ், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஜப்பான் இந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இங்கு தேசியக் கொடியை ஏற்றினார்.
  • மேலும் அவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாஹித் மற்றும் சுவராஜ் தீவுகள் என பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்