அந்துப் பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கை பற்றிய சமீபத்திய ஆய்வு
February 23 , 2022 1400 days 1042 0
வடகிழக்கு இந்தியாவின் இமாலயச் சூழலமைப்பில் திகழும் மகரந்தச் சேர்க்கைக்கு அந்துப்பூச்சிகள் மிக அவசியம் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு இமாலயத்திலுள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலுள்ள 21 வெவ்வேறு வகையான தாவர இனங்களில் 91 அந்துப்பூச்சி இனங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எரேபிடே (டைகர் அந்துப் பூச்சிகள், எரேபிடே அந்துப்பூச்சிகள், லைச்சன் அந்துப் பூச்சிகள்) ஆகியவை இமாலயப் பகுதிகளில் நடைபெறும் மகரந்தப் பரிமாற்றத்திற்கான மிக முக்கியக் குடும்பங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
பகல் நேரங்களில் மகரந்த தேனிக்கள் செய்யும் வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனிக்கள் போன்றவை மீதே பெரும்பாலான மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சியானது மேற்கொள்ளப் படுகின்றன என்பதால் இந்த ஆய்வு முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
அதே சமயம் இரவு நேர மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் பங்கு குறைந்த அளவு அறிவியல் ஈர்ப்பினையேப் பெறுகிறது.