ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகம் ஆனது அந்த்யோதயா திட்டத்திற்கான 2022-23 ஆம் ஆண்டு கணக்கெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் பெறப்படும் விளைவுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்ட வகையிலான ஒரு இணையதளம் மற்றும் கைபேசிச் செயலி ஆகியவையும் தொடங்கப்பட்டன.
கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்திற்கான (GPDP) பங்கேற்புத் திட்டமிடல் என்ற ஒரு செயல்முறைக்கு உதவச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப் படுகிறது.
இது சேவை வழங்கலை மேம்படுத்துவது, குடியுரிமையை மேம்படுத்துவது, மக்கள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் கூட்டணிகள் உருவாவதற்கான ஒரு வாய்ப்பினை உருவாக்குவது, மற்றும் உள்ளாட்சி மட்ட அளவிலான நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.