அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைக் குறியீடு - 2018
May 11 , 2018 2635 days 836 0
உலகளாவிய ஆலோசனை நிறுவனமானT. கியர்னியால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைக் குறியீட்டில் இந்தியா 11-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில் இந்தியா மூன்று இடங்களை தரவரிசையில் தவறவிட்டுள்ளது. இந்தியா 2017-ஆம் ஆண்டில் 8-வது இடத்தையும், 2016-ஆம் ஆண்டில் 9-வது இடத்தையும் பிடித்தது.
2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
2018-ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள் அமெரிக்கா (முதலிடம்), கனடா (இரண்டாம் இடம்), ஜெர்மனி (மூன்றாம் இடம்), ஐக்கியப் பேரரசு (நான்காம் இடம்), சீனா (ஐந்தாம் இடம்) ஆகியனவாகும்.
சமீபத்திய பெருநிறுவன வரிவிகிதக் குறைப்புகள், நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான வலுவான மிகப் பெரிய சந்தையை கொண்டிருக்கும் காரணங்களினால் அமெரிக்கா தொடர்ச்சியாக ஆறாவது முறையாக முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சுவிட்சர்லாந்தும், இத்தாலியும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.
இந்தக் குறியீடானது அரசியல், பொருளாதார மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளில் செய்யப்படும் மாற்றங்களானது வரும் ஆண்டுகளில் எவ்வாறு அந்நிய நேரடி முதலீட்டின் வரவை பாதிக்கும் என்பதற்கான வருடாந்திர ஆய்வு அறிக்கையாகும்.