TNPSC Thervupettagam

அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு

April 27 , 2025 3 days 27 0
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 677.84 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • இந்தியாவின் கையிருப்பில் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணிச் சொத்துக்கள் 0.8 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 574.98 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • இதற்கிடையில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ஆனது சுமார் 638 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 79.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • மேலும், சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) என்பது 6 மில்லியன் டாலர்கள் குறைந்து 18.35 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் கையிருப்பு நிலையானது, சுமார் 43 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 4.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் சுமார் 6.7% ஆக இருந்த அந்நியச் செலாவணி இருப்புக்களில் இந்தியாவின் தங்கத்தின் பங்கு ஆனது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 12% ஆக இரட்டிப்பாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்