அந்நியச் செலாவணி மேலாண்மை (கடன் சாரா) திருத்த விதிகள், 2024
August 22 , 2024 410 days 383 0
நிதி அமைச்சகம் ஆனது, 2019 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் சாராத அம்சங்கள்) விதிகள் 16.08.2024 தேதியிட்ட அறிவிப்பின் படி திருத்தியமைத்து உள்ளது.
இது பன்னாட்டுப் பங்கு பரிமாற்றங்களை எளிதாக்கச் செய்வதையும், வெளிநாட்டு நிறுவனப் பங்குகளுக்கு ஈடாக இந்திய நிறுவனப் பங்குகளை வெளியிடுவது அல்லது பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இணைப்புகள், கையகப்படுத்துதல்கள் மற்றும் பிற உத்திசார் முயற்சிகள் மூலம் இந்திய நிறுவனங்களை உலகளவில் விரிவுப்படுத்துவதை எளிதாக்குவதோடு, மேலும் அவை புதியச் சந்தைகளை அடையவும் உலகளவில் தங்கள் இருப்பை மேம்படுத்தவும் உதவும்.
இது வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்களுக்கு (OCI) சொந்தமான நிறுவனங்களால் திருப்பி அனுப்பப் படாத வகையின் ஒரு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகளை வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) நிறுவனங்களால் மேற்கொள்ளப் படும் முதலீடுகளுக்கு இணையாக கையாள்வதை தெளிவுபடுத்துகிறது.