TNPSC Thervupettagam

அனலாக் பன்னீர் தடை - கர்நாடகா

August 25 , 2026 16 hrs 0 min 68 0
  • கர்நாடகா மாநிலம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 வரை ஓராண்டு காலத்திற்கு அனலாக் பன்னீரை "பன்னீர்" எனத் தயாரிப்பது, சேமித்து வைப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வதற்கு அம்மாநிலம் தடை விதித்துள்ளது.
  • அனலாக் பன்னீர் என்பது பால் கொழுப்பு அல்லது பால் திடப்பொருட்களுக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவரக் கொழுப்பு அல்லது பால் அல்லாத பிற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் அல்லாத ஒரு பொருளாகும்.
  • 2006 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், முக்கியமாக பிரிவுகள் 30(2)(a), 18 மற்றும் 29 ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி (சீஸ்), உறைந்த இனிப்புகள் மற்றும் கலப்புக் கொழுப்பு விரிப்புகள் போன்ற தனித்தனி உணவு வகைகளைக் கொண்ட தரப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
  • அனலாக் பன்னீரைக் கட்டுப்படுத்துவதில் இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்துடன் தற்போது கர்நாடகாவும் இணைகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்