அனாதை இல்லக் கடத்தலை குற்றமாக்கிய நாடு - ஆஸ்திரேலியா
December 12 , 2018 2522 days 810 0
அடிமைத் தனத்தின் ஒரு வடிவமான தவறான வழியில் குழந்தைகளை அனாதை இல்லங்களில் சேர்க்கும் நடவடிக்கையை குற்றமாக்கிய உலகின் முதலாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட நவீன அடிமைத்தன மசோதாவின்படி, அனாதை இல்லக் கடத்தலானது கடத்தல் மற்றும் அடிமைப்படுத்துதல் என்ற குற்றமாகக் கருதப்படும்.
ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது உலகில் இது தொடர்பான நடவடிக்கைகளில் முதலாவதாகும்.
அனாதை இல்லக் கடத்தல்
உலகெங்கிலும் உள்ள அனாதை இல்லங்களில் 80 சதவீத குழந்தைகள் குறைந்தது பெற்றோரில் ஒருவரையாவது கொண்டுள்ளனர். ஆனால் சர்வதேச தன்னார்வலர்களை ஈர்க்கும் முயற்சியில் அவர்கள் அனாதை இல்லங்களில் இருக்கின்றனர்.
இதுவே “அனாதை இல்லக் கடத்தல் ” என்றழைக்கப்படுகிறது.