இந்திய வன ஆய்வு நிறுவனம் (FSI), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அனாவரன் காடழிப்பு அமைப்பிலிருந்து எச்சரிக்கைகளை வழங்குவதை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளது.
அனாவரன் என்பது செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி காடு இழப்பைக் கண்டறியும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தளமாகும்.
இது ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மாநில வனத் துறைகளுக்கு காடழிப்பு குறித்த நிகழ் நேர எச்சரிக்கைகளை வழங்க 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.
இந்த அமைப்பு ஐரோப்பிய விண்வெளி முகமையின் சென்டினல்-1 மற்றும் சென்டினல் - 2 செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது.
இது இயந்திர கற்றல் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் 10 முதல் 20 மீட்டர் தெளிவுத்திறனுடன் வனப்பகுதியின் மாற்றங்களை அதிக துல்லியத்துடன் கண்டறிகிறது.
இந்திய வன ஆய்வு நிறுவனம் (FSI), மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) கீழ் செயல்படுகிறது.