அனுபம் கெர் FTII இன் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா
November 2 , 2018 2628 days 1009 0
பிரபல நடிகர் அனுபம் கெர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII - Film and Television Institute of India) தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் FTII இன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்ட இவர் கஜேந்திர சௌஹானையடுத்து இப்பதவிக்கு வந்தார்.
இதன் மூலம், பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்த FTII இன் முதல் தலைவராக கெர் ஆகியுள்ளார்.
FTII தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக குறைந்தபட்ச பதவிக் காலமாக 11 மாதங்கள் மட்டுமே FTII-ன் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்.