அனைத்து அரசுப்பணிகளுக்குமான ஒருங்கிணைக்கப்பட்ட செயலி
March 3 , 2018 2707 days 1038 0
தெலுங்கானா அரசு “T APP Folio” என்ற m-Governance கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் செயலியாகும் (Digital Application).
மீ சேவா சேவைகள், RTA சேவைகள், கட்டணம் செலுத்தல் மற்றும் செலுத்துதல் சேவைகள் (Payment Services) ஆகியனவற்றை ஒரு முனையில் மக்கள் பெறுவதற்கான (One point access) வசதி இந்த செயலியில் உள்ளது.
கர்நாடகாவுக்குப் பிறகு, இந்த டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக தெலுங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, “அரசு முதல் மக்கள் வரை”(Government to Citizen) என்ற சேவையை வழங்கி வருகிறது.
“T APP Folio” ஆனது T wallet, my GHMC, RTA மற்றும் Hawk Eye ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
“T APP Folio”வில் உள்நுழைவதன் (Sign in) மூலம் அனைத்து விதமான சேவைகளுக்கான செயலிகளின் செயல்பாட்டை/சேவைகளை அறிய/பெற முடியும்.
இந்த செயலி மக்களின் வசதிக்காக தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்படுகிறது.
இந்திய அரசின் “e-TaaL” வலைத்தளத்தில் ஜூன் 2, 2014 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையில், 1000 மக்கள் தொகையில் எவ்வளவு மின்னணு பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதனடிப்படையில் தெலுங்கானா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.