அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு விருதுகள் 2017
July 26 , 2018 2637 days 918 0
இந்தியாவில் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF - All India football federation) ஆனது இந்திய மற்றும் பெங்களூரு கால்பந்து சங்க அணியின் தலைவர் சுனில் சேத்திரியை 2017 ஆம் ஆண்டிற்கான AIFF விளையாட்டு வீரராக அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சங்கங்களுக்கான நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டம் AIFF ன் தலைவர் பிரவுல் படேல் தலைமையில் நடைபெற்றது.
2017ஆம் ஆண்டிற்கான AIIF-ன் பெண் விளையாட்டு வீரருக்கான விருதை கமலாதேவி பெற்றார்.