அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்
May 22 , 2025 8 hrs 0 min 12 0
கூடுதல் நீதிபதிகளாக ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளுக்கு என முழு உரிமை பெறுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெவ்வெறு தீர்ப்புகளில் வழங்கப்பட்ட ஓய்வு மற்றும் ஓய்வூதியச் சலுகைகளின் மாறு பட்ட தரநிலைகள் அரசியலமைப்பின் 14வது சரத்தின் கீழ் ஒரு சமத்துவ உரிமையை மீறுகிறது எனவும் கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், எந்த அடிப்படையில் பதவி பெற்றிருந்தாலும் அனைவருக்கும் 'ஒரு பதவி-ஒரு ஓய்வூதியம்' என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஆண்டிற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முழு ஓய்வூதியத்தைத் தனித்தனியாக வழங்கும்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக ஓய்வு பெறாத உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசாங்கம் ஆண்டிற்கு 13.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான முழு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளில், உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அடங்குவர்.