அனைத்து திறன்மிகு நகரங்களிலும் ஒருங்கிணைந்த வழிகாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையம்
April 21 , 2022 1230 days 497 0
இந்தியாவில் திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் 100 நகரங்களுள், 20 நகரங்களில் சில ஒருங்கிணைந்த வழிகாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள நகரங்களிலும் இந்த மையங்கள் நிறுவப்படும்.
இந்த மையங்கள் திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இந்தத் திட்டமானது 100 சுய நிலைத்தன்மையுடைய, குடிமக்களுக்கு உகந்த நகர்ப் புறக் குடியிருப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்துறை அமைச்சகமானது ஒருங்கிணைந்த வழிகாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மைய மாதிரியினை இறுதி செய்து, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இதனை ஒரு மாதிரித் திட்டமாக அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.