அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள்
November 7 , 2019 2111 days 672 0
நிர்பயா நிதியின் உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகளை (Anti-Human Trafficking Units - AHTU) அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் 146 மாவட்டங்களில் மட்டுமே AHTUகள் செயல்படுகின்றன.
இது பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும். மேலும் அவர்களிடையே இவை அதிகப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
இந்திய அரசு தனது 2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிர்பயா நிதிக்கு 1000 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. இந்நிதி அரசாங்கத்தின் சில முன்முயற்சிகளையும் பெண்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஆதரிக்கின்றது.