அனைத்து வகையான பன்னாட்டு அமைப்பு சார் குற்றங்களைத் தடுப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்குமான சர்வதேச தினம் 2025 – நவம்பர் 15
November 20 , 2025 7 days 32 0
இந்த நாள் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று பலெர்மோ உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும் பன்னாட்டு அமைப்பு சார் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கையை (UNTOC) ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் நாளாகும்.
இது நாடு கடந்த பன்னாட்டு அமைப்பு சார் குற்றத்தின் (TOC) அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) தீர்மானத்தால் அறிவிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Follow the Money. Stop Organized Crime" என்பதாகும்.