TNPSC Thervupettagam

அனைவருக்குமானப் போக்குவரத்து சவால் – நிலை 2

November 15 , 2022 906 days 389 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது, "அனைவருக்குமானப் போக்குவரத்து சவால்" என்பதின் இரண்டாம் நிலையினை அறிமுகப் படுத்தியது.
  • இது இந்தியக் குடிமக்களின் போக்குவரத்து அனுபவத்தினை எளிதாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சவாலானது, முறைசார் மற்றும் மற்றும் முறைசாரா பொதுப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் எண்ணிமம் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முயல்கிறது.
  • இந்தச் சவால் பிரச்சினைகளைக் கண்டறிதல், அதற்கானத் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் அதற்கான மாதிரி சோதனை ஆகிய 3 நிலைகளைக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தச் சவாலின் முதல் நிலையில் 130க்கும் மேற்பட்ட நகரங்கள் பங்கேற்றுள்ளன.
  • இரண்டாம் நிலைக்குத் தகுதி பெற்ற 46 நகரங்கள் 165க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்த அறிக்கையை உருவாக்குவதற்கான கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தச் செய்தன.
  • நகரங்களால் அடையாளம் காணப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்கிடச் செய்வதற்காக வேண்டி, தற்போது புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த சவாலின் இரண்டாம் நிலை அணுகுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்