TNPSC Thervupettagam

அன்டரேசினை கடந்து சென்ற நிலவு

May 8 , 2024 12 days 79 0
  • பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆனது பிரகாசமான செந்நிற நட்சத்திரமான அன்டரேஸின் முன் நிலவு கடந்து செல்வதை படம் பிடித்து உள்ளது.
  • ஏப்ரல் 27 ஆம் தேதியன்று இரவு நிலவு அன்டரேஸ் பகுதியின் முன்னால் கடந்து சென்றதனால் 40 நிமிடங்கள் மறைந்து காணப் பட்டது.
  • நிலவானது அதன் சுற்றுப்பாதையில் நகரும் போது தோராயமாக மாதத்திற்கு ஒரு முறை, சில சமயம் மறைந்திருக்கும், அல்லது அதன் பின்னால் இருக்கும் பிரகாசமான நட்சத்திரங்கள், மற்றும் சில நேரங்களில், கிரகங்களை கூட மறைக்கும்.
  • ஸ்கார்பியஸ் விண்மீன் திரளில் பிரகாசமான நட்சத்திரமான அன்டரேஸ் (ஜ்யேஷ்தா) நட்சத்திரத்திற்கு இந்த நிகழ்வு அவ்வப்போது நடக்கும்.
  • இந்தியாவில் இருந்து காணக் கூடிய வகையிலான அன்டரேஸின் மறைப்பு நிகழ்வு என்பது இந்த ஆண்டு பிப்ரவரி 05 ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
  • இது போன்ற அடுத்த நிகழ்வு 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழும்.
  • இருப்பினும், நிலவு சனிக் கோளினை மறைத்திருப்பதை ஜூலை 24 ஆம் தேதியும், மீண்டும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியும் இந்தியாவில் காண இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்