இத்தினத்திற்கான கொண்டாட்டங்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 முதல் 07 ஆம் தேதி வரை நடைபெற்றன.
சர்வதேசப் பௌத்த கூட்டமைப்பு ஆனது, கௌதம புத்தர் பல்கலைக்கழகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, கிரேட்டர் நொய்டாவில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
"The Relevance of Abhidhamma in Understanding Buddhist Thought" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச மாநாடும் நடைபெற்றது.
இந்திய அரசு ஆனது பாலி மொழியை ஒரு செம்மொழியாக அங்கீகரித்து, அபிதம்ம பீடகம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.