TNPSC Thervupettagam

அபுஜ்மதியா பழங்குடியினர்

November 29 , 2025 13 days 87 0
  • அபுஜ்மதியா பழங்குடியினரின் உறுப்பினர்கள் பஸ்தார் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இணைகிறார்கள்.
  • பஸ்தார் ஒலிம்பிக் போட்டிகள் சத்தீஸ்கரில் நடைபெறுகின்றன.
  • அபுஜ்மதியா பழங்குடியினர் மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினரின் ஒரு துணைக் குழுவினர் ஆவர்ம்.
  • அவர்கள் திராவிடத்திற்கு முந்தைய அல்லது புரோட்டோ-ஆஸ்திரலாய்டு இனக் குழுவைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்கள் வலுவான உடல் அமைப்பைக் கொண்டு உள்ளனர்.
  • அவர்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூர், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் பரவியுள்ள அபுஜ்மர் காடுகளில் வாழ்கின்றனர்.
  • அவர்கள் சத்தீஸ்கரில் உள்ள 7 எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களில் (PVTGs) ஒருவராவர்.
  • அவர்கள் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியின் உள்ளூர் வடிவமான மடி என்ற மொழியைப் பேசுகிறார்கள்.
  • அவர்களின் முக்கியத் தெய்வங்களில் புத்ததேவர், தாக்கூர் தேவ், புத்திமை மற்றும் லிங்கோபன் ஆகியோர் அடங்குவர்.
  • அவர்கள் சூரியன், சந்திரன், ஆறுகள், மலைகள் மற்றும் பூமி போன்ற இயற்கையை வணங்குகிறார்கள்.
  • அவர்களின் முக்கியப் பண்டிகைகள் போலா, காகாசர் மற்றும் பாண்டும் ஆகும் என்பதோடு மேலும் அவர்கள் கக்சர், கெடி மற்றும் ரிலோ போன்ற நடனங்களை ஆடி மகிழ்கின்றனர்.
  • அவர்களின் சமூகம் குல (கோத்ரம்) பிரிவுகளைப் பின்பற்றுகின்ற தந்தை வழி சமூகம் சார்ந்தது என்பதோடு மேலும் ஒரு மஞ்சி (தலைவர்) என்பவர் தலைமையிலான ஒரு பாரம்பரியப் பஞ்சாயத்தினால் அது வழி நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்