TNPSC Thervupettagam

அபுதாபியில் கிறிஸ்துவக் குடியேற்றம்

August 30 , 2025 23 days 43 0
  • அபுதாபிக்கு அருகிலுள்ள சர் பானி யாஸ் தீவில் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒரு சுண்ணச்சாந்தினால் செய்யப்பட சிலுவையைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
  • 1992 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வீடுகளின் முற்றத்தில் இந்த சிலுவை கண்டுபிடிக்கப்பட்டது என்பதோடு இது அருகிலுள்ள தேவாலயம் மற்றும் மடாலயத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, வீடுகள் ஒரு கிறிஸ்துவக் குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்குகிறது.
  • மூத்தத் துறவிகள் பிரதான மடாலயத்திலிருந்து விலகி பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்திற்காக இந்த சிறிய வீடுகளில் வசித்து வந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
  • ஆறாம் நூற்றாண்டில் இப்பகுதியில் கிறிஸ்துவச் சமூகங்கள் செழித்து வளர்ந்தன என்ற நிலையில் எட்டாம் நூற்றாண்டில் மடாலயம் கைவிடப் படுவதற்கு முன்பு முஸ்லிம்களுடன் அவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்