ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ மக்களவையில் அறிமுகப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதியை அதிகாரப் பூர்வமாக அங்கீகரிப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மசோதா, 'ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014'-இல் திருத்தம் செய்ய முன்மொழிகிறது.
முன்னதாக, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு 10 ஆண்டு காலத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் கூட்டுத் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப் பட்டிருந்தது.
அமராவதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கக் கோரி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை 2026 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அமராவதி சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தலைநகராக மாறும்.