ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அமராவதியின் முதற்கட்டப் பணிகளுக்காக உலக வங்கி 340 மில்லியன் டாலர்களை விடுவித்தது.
ஏப்ரல் 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 130-150 மில்லியன் டாலர்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தத் திட்டம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கூட்டு ஆதரவுடன் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த நிதி உறுதிப்பாட்டுடன் செயல்படுத்தப் படுகிறது.
இந்திய அரசும் இத்திட்டத்திற்காக சுமார் ₹15,000 கோடியை வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.
இது முடிவுகளுக்கான திட்ட (PforR) மாதிரியைப் பயன்படுத்தி அமராவதி ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (AIUDP) கீழ் செயல்படுத்தப் படுகிறது.