TNPSC Thervupettagam

அமலாக்க இயக்குநரகத்தின் 70 ஆண்டுகள் நிறைவு

May 16 , 2026 15 days 65 0
  • அமலாக்க இயக்குநரகமானது (ED) 1956 ஆம் ஆண்டு மே 1 அன்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் கீழ் நிறுவப்பட்டது.
  • ED என்பது ஒரு அரசியலமைப்பு சாராத மற்றும் சட்டம் சாராத நிர்வாக அமைப்பாகும், நிதி குற்றங்களை விசாரணை செய்யும் இது மற்றும் இந்தியா முழுவதும் பொருளாதாரச் சட்டங்களை அமல்படுத்துகிறது.
  • இது முக்கியமாக பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999 ஆகியவற்றின் கீழ் செயல் படுகிறது.
  • தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA), 2018-இன் கீழ், விசாரணையைத் தவிர்ப்பதற்காக இந்தியாவிலிருந்து தப்பிச் செல்லும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய ED-க்கு அதிகாரம் உள்ளது.
  • ED-இன் தலைவராக அமலாக்கத் துறை இயக்குநர் செயல்படுகிறார், மேலும் இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளதுடன், நாடு முழுவதும் 10 மண்டல அலுவலகங்கள் மற்றும் 11 துணை மண்டல அலுவலகங்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்